ரசிகர்களே… உங்களால் கர்வம் கொள்கிறேன்’ – தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை

0
316

ரசிகர்களே… உங்களால் கர்வம் கொள்கிறேன்’ – தனுஷின் நெகிழ்ச்சி அறிக்கை

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் தனுஷ். இவரது தனது 37 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் காமன் டிபிக்களை வைத்துக்கொண்டும், மேஷ் ஆப் வீடியோக்களை வெளியிட்டும் மகிழ்ந்தனர். அவரது பிறந்த நாளை முன்னிட்டு ஜகமே தந்திரம் படத்தில் இருந்து ஒரு பாடலும், கர்ணன் படத்திலிருந்து ஒரு மேக்கிங் வீடியோவும் வெளியிடப்பட்டது. இவையும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் ரசிகர்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. உங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போய்விட்டேன். நீங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை என்னால் முடிந்த வரை பார்த்தேன். ரசித்தேன், மகிழ்ந்தேன். மிக்க மிக்க நன்றி. நீங்கள் செய்த நற்பணிகளை கண்டு நெகிழ்ந்த நான் உங்களால் கர்வம் கொள்கிறேன். பெருமைப் படுகிறேன்.

எனக்கு வாழ்த்து தெரிவித்த திரைதுறையினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பெருமக்கள், நலம் விரும்பிகள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.