யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம் சினம்கொள்: இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

0
138

யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம் சினம்கொள்: இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

ஈழத்தில் 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்த பின்பும் முடிவுறாத இன்னொரு யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது ” சினம்கொள் ” படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.

Sky magic பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” சினம் கொள் “

ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – M.R.பழனிக்குமார்
இசை – N.R.ரகுநந்தன்
வசனம் மற்றும் பாடல்கள் – தீபச் செல்வன்.
எடிட்டிங் – அருணாசலம் சிவலிங்கம்.
கலை – நிஸங்கா ராஜகரா.
சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் – நித்தியானந்தம்.
தயாரிப்பு நிர்வாகம் – R.வெங்கடேஷ்
தயாரிப்பு – காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.
கதை, திரைக்கதை, இயக்கம் – ரஞ்சித் ஜோசப்.

படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியதாவது….
2009 ல் ஈழ விடுதலை போருக்கு பிறகு ஈழ மண்ணில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம். யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம். போரின் வடுக்களோடு வாழும் மக்களின் அவலத்தை மட்டுமல்லாது போருக்கு பிறகு அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும், சிறையிலிருந்து வெளிவந்த போராளிகளின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறோம்.
உலகத்திற்கு யுத்தம் முடிவுற்றது என்று சொல்லப் பட்டாலும் இன்றும் ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இதில் பதிவு செய்துள்ளோம்.

ஈழ வரலாற்றில் இந்திய, ஈழ மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ள முதல் படம். முழுக்க முழுக்க ஈழத்தில் மட்டுமே படப்பிடிப்பை நடத்தி உள்ளோம்.

அங்கே படப்பிடிப்பை நடத்த மிகவும் சிரமப் பட்டோம் சிங்களர்களுக்கு எதிரான படம் என்று படப்பிடிப்பை நடத்த விடாமல் செய்துவிட்டார்கள். அதனால் சுமார் 10 நாட்களுக்கும் மேல்75 பேருடன் யாழ்ப்பாணத்தில் சும்மா இருந்தோம் அதனால் எங்களுக்கு பண இழப்பும் ஏற்பட்டது. எப்படியே படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
படம் வருகின்ற ( 14.01.2022 ) பொங்கல் அன்று Eelam play என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

அனைவரும் எங்கள் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப்.