’மோதாதீங்கன்னா கேக்குறீங்களாடா?’ – டாப் டிரெண்டிங்கில் சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ்

0
107

’மோதாதீங்கன்னா கேக்குறீங்களாடா?’ – டாப் டிரெண்டிங்கில் சிம்புவின் ‘பத்து தல’ கிளிம்ப்ஸ்

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலித்தில் உள்ளது.

சிம்புவின் பிறந்தநாளையொட்டி வெளியாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் கிளிம்ப்ஸ் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. ’சில்லுனு ஒரு காதல்’ இயக்குநர் கிருஷ்ணா இயக்கும், இப்படத்தில் கெளதம் கார்த்திக், பிரியா பவானிசங்கர், மனுஷ்யபுத்திரன், டீஜே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த 2017 ஆம் ஆண்டு கன்னடத்தில் சிவ ராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ’மஃப்டி’படத்தின் ரீமேக்தான் ‘பத்து தல’. கருப்பு சட்டை லுங்கியில் செம்ம மிரட்டலுடன் கவனம் ஈர்க்கும் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிளிம்ப்ஸில் சிம்பு மட்டுமல்ல ’ஏ.ஜி.ஆர் கிட்ட மோதாதீங்கன்னா கேக்குறீங்களாடா?’, ’செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஏ.ஜி.ஆர் கோட்டைக்குள்ள நுழைய பயப்படும்டா’போன்ற வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன. நேற்றிரவு வெளியான இப்படத்தின் கிளிம்ப்ஸ் இதுவரை யூடியூபில் 1 மில்லியன் பார்வைகளை நெருங்கிக்கொண்டிருப்பதோடு யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.