மை டியர் பூதம் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு..!

0
114

மை டியர் பூதம் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு..!

இயக்குனர் என். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘மை டியர் பூதம்’. பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி. பிள்ளை தயாரித்துள்ளார்.

‘மை டியர் பூதம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இன்று படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் ஓ மை மாஸ்டர் என்ற பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் பொன்மாணிக்கவேல், தேள் ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. மேலும் பிரபுதேவா, பஹீரா’, ‘யங் மங் சங்’, பா. விஜய் இயக்கத்தில் பெயரிடப்படாத படம், ’பொய்க்கால் குதிரை’, கல்யாணின் பெயரிடப்படாத படம் உள்ளிட்டப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா.