மே 6-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை

0
156

மே 6-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்திற்கு தடை

ரியாத்: மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தொடர்ந்து அவெஞ்சர்ஸ், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட சூப்பர் ஹீரோ திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இந்த திரைப்படங்களுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. மார்வெல் திரைப்படங்களில் அடுத்த படமாக டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டி வெர்ஸ் ஆப் மேட்னஸ் என்ற திரைப்படம் வரும் மே 6-ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் பெனெடிக்ட் கும்பர்பேட்ச், எலிசபெத் ஓல்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்பைடர் மேன் 1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் சேம் ரைமி இயக்கவுள்ளார்.

சவுதி அரேபியாவில் இப்படம் மே 5-ஆம் தேதி வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தை வெளியிடுவதற்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.

இந்த படத்தில் ஒசித்தல் கோமேஸ் நடிக்கும் அமெரிக்கன் சாவேஸ் என்ற கதாபாத்திர தன்பால் ஈர்ப்பாளராக காட்டப்பட்டுள்ளது. இது அந்நாட்டு சட்டத்திற்கு எதிராக உள்ளது என்பதால் அப்படத்தியின் வெளியீட்டு சான்றிதழை வழங்கப்போவதில்லை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டில் உள்ள மார்வெல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.