முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை ரிலாக்ஸ்

0
96

முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த காதல் கதை ரிலாக்ஸ்

இயக்குனர் தம்பி செய்து இப்ராஹிம் என்ற ஸ்ரீ நாயகனாக நடிக்கிறார்

ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் பத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக பணியாற்றிய டேவி சுரேஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

ஹிந்தியில் வெளியான திருட்டுப்பயலே 2 படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.

பல வெற்றிப்பாடல்களுக்கு நடனம் அமைத்த தினேஷ் இந்த படத்திற்கு நான்கு பாடல்களுக்கு பல்வேறு விதமான நடன அமைப்புகளை தரவிருக்கிறார்.

பிரபல கலை இயக்குனர் S.S. மூர்த்தி இந்த படத்தின் கலை இயக்குனராக பணியாற்றுகிறார்.

தயாரிப்பு மேற்பார்வை – வேலுமணி

மக்கள் தொடர்பு – மணவை புவன்.

தயாரிப்பு – ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி.

இயக்குனர்கள் ரமணா, சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய பா. ஆனந்த்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார்.

படம் பற்றி இயக்குனர் பா. ஆனந்த்குமார் பகிர்ந்தவை…

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தனக்காக, தன்னை சார்தவர்களுக்காக ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டே இருக்கிறோம் இறுதியில் எல்லோரும் எதிர்பார்ப்பது நிம்மதியான ஓய்வு ( ரிலாக்ஸ் ) அதுதான் இந்த படத்தின் கரு.

ஆறு அறிவு படைத்த எல்லா மனிதர்கள் அனைவரும் காமம், காதல் என்ற உணர்வுகளுடன் பிறக்கின்றனர். இக்கதையில் வரும் நாயகன் தன் வாழ்க்கையில் காதலுக்கும், காமத்திற்கும் இடமே இல்லை என்று வாழ்கிறான். ஒரு சூழலில் மூன்று பெண்கள் அவன்மீது காதல் வயப்படுகின்றனர். ஆனால் அவனுக்கு பெற்றோர்கள் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பதற்றமில்லாமல் எப்படி ரிலாக்ஸாக முடிவு செய்கிறான் என்பதை முழு நகைச்சுவை கலந்து குடும்பப்பாங்கான, ஜனரஞ்சக படமாக உருவாக்க உள்ளோம்.
ஸ்டெஸ், டென்ஷன்களோடு சுற்றித்திரியும் இன்றயை இளைஞர்களுக்கு இந்த படம் நிச்சயமாக ரிலாக்ஸாக இருக்கும்.

படப்பிடிப்பு வயநாடு, காசர்கோடு, மூணாறு போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.