முருங்கைக்காய் சிப்ஸ் விமர்சனம்: முருங்கைக்காய் சிப்ஸ் ஒவர் டோஸ் சிப்ஸ்

0
119

முருங்கைக்காய் சிப்ஸ் விமர்சனம்: முருங்கைக்காய் சிப்ஸ் ஒவர் டோஸ் சிப்ஸ்

லிப்ரா புரொடக்ஷன் சார்பாக வி.சி.ரவீந்தரன் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம்ஸ் சார்பாக சிவசுப்பரமணியன், சரவண பிரியன் இணைந்து தயாரித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீஜர்.
இதில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, தயாரிப்பாளர் வி.சி.ரவீந்தரன், மனோபாலா, மதுமிதா, முனீஷ்காந்த், மயில்சாமி, ராஜூ ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-தரண்குமார், ஒளிப்பதிவு-ரமேஷ் சக்கரவர்த்தி, எடிட்டர்-ஜோமின், கலை-நர்மதா வேணி, நடனம்-ஷோபி, லலிதா ஷோபி, ராபர்ட், பாடல்கள்-வி.சி.ரவீந்தரன், கூ.கார்த்திக், மாலி, உடை வடிவமைப்பு-ஹினா, நிவேதா ஜோசப், தயாரிப்பு நிர்வாகி-அசோகன்.ஜி, ஒப்பனை-ராச்சல் சிமித்,  பிஆர்ஒ-நிகில்.
சாந்தனு-அதுல்யா ரவிக்கு திருமணம் நடக்கிறது. இவர்களின் முதலிரவு அன்று தாத்தா பாக்யராஜ் சாந்தனுவை அழைத்து முதலிரவு நடக்கக்கூடாது என்றும்,தூங்காமல் விழித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் 300 கோடி பரம்பரை சொத்து ஆசிரமத்திற்கு போய் விடும் என்று கண்டிஷன் போடுகிறார். அதே சமயம் அத்தை ஊர்வசி அதுல்யா ரவியை அழைத்து அவர்களது பரம்பரையில் முதலிரவு நடக்கவேண்டும் என்றும் அவ்வாறு நடக்கவில்லை என்றால் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லி அனுப்புகிறார். இருவருக்கும் வெவ்வேறு கண்டிஷன் போட்டிருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் முதலிரவில் தவிக்கிறார்கள். அதே சமயம் அவர்களை சேர்த்து வைத்து 300 கோடியை அபகரிக்க மேனேஜர் மனோபாலா அவரது மனைவி மதுமிதா திட்டம் போடுகின்றனர். இவர்களின் திட்டம் நிறைவேறியதா? சாந்தனு-அதுல்யா ரவி முதலிரவு நடந்ததா? 300 கோடி சொத்து யாரிடம் சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, தயாரிப்பாளர் வி.சி.ரவீந்தரன், மனோபாலா, மதுமிதா, முனீஷ்காந்த், மயில்சாமி, ராஜூ அனைவருமே நகைச்சுவை என்ற பெயரில் சோதித்து படத்தை நகர்த்த உதவி செய்கின்றனர்.

தருண்குமாரின் இசையோடு பின்னணி இசையும், ரமேஷ் சக்கரவர்த்தியின் ஒளிப்பதிவும் சிறப்பாக உள்ளது.

முதலிரவை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைத்திருப்பதால், முடிந்தவரை சில காட்சிகளில் சமரசம் செய்து இரட்டை அர்த்த வசனங்களால் நிரப்பி, சலிப்படையும் காமெடி கலந்து சிரிக்க வைக்கும் முயற்சியில் தோல்வியே மிஞ்சுகிறது. ஆனால் இறுதியில் தயாரிப்பாளர் ரவீந்தரன் நச்சென்று அடிக்கும் காமென்ட் தான் படத்தின் ஹைலைட்.

மொத்தத்தில் லிப்ரா புரொடக்ஷன் சார்பாக வி.சி.ரவீந்தரன் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம்ஸ் சார்பாக சிவசுப்பரமணியன், சரவண பிரியன் தயாரித்திருக்கும் முருங்கைக்காய் சிப்ஸ் ஒவர் டோஸால் திகட்டுகிறது.