முத்தையா முரளிதரன் பயோபிக் – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி விடுத்த வேண்டுகோள்

0
236

முத்தையா முரளிதரன் பயோபிக் – விஜய் சேதுபதிக்கு இயக்குநர் சீனு ராமசாமி விடுத்த வேண்டுகோள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது ‘லாபம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை அடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

இந்நிலையில், இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் விஜய் சேதுபதிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில், விஜய் சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். விஜய்சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” திரைப்படம் அதற்கு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து. உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து அய்யா.. நமக்கெதற்கு மாத்தையா?.. மாற்றய்யா?

இயக்குனர் சீனு ராமசாமியின் பதிவு

இவ்வாறு சீனுராமசாமி கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் கதையில் நடிக்க வேண்டாம் என்பதற்காக இப்படி பதிவு செய்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.