மீண்டும் விஜய் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

0
266

மீண்டும் விஜய் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?

நடிகர் விஜய் ‘மாஸ்டர்’ படத்துக்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 65’ என பெயரிடப்பட்டுள்ளது. ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார்.  இந்த படத்தை 2021 இறுதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிந்துள்ளது. கொரோனா தீவிரம் குறைந்ததும் சென்னையில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 66-வது படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உள்ளார்.

அவரது இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் 2 கதாநாயகிகளை கொண்ட கதை என்று கூறப்படுகிறது. அதில் ஒரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே பைரவா, சர்கார் படங்களில் விஜய் உடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.