மீண்டும் தமிழுக்கு வரும் நடிகர் தேஜ்

0
146

மீண்டும் தமிழுக்கு வரும் நடிகர் தேஜ்

தமிழில் வெளியான கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காதலுக்கு மரணமில்லை காந்தம் உள்ளிட்ட படங்களை கதாநாயகனாக நடித்தவர் நடிகர் தேஜ். தற்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்கிற படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மறைந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவரும் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரின் சகோதரருமான ராகவேந்திரா ராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் தேஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களும் இதில் நடிக்க இருக்கின்றனர்.

இந்த படத்தை முடித்ததும் மீண்டும் GOD (Glory Of Daemon) என்கிற நேரடி தமிழ் படம் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு திரும்புகிறார். ராமாச்சாரி 2.0 படம் வெளியான பின்னர், வரும் 2023 ஜனவரியில் இந்த புதிய படம் துவங்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழு விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Actor of film Konjum Veyil Konjum Malai Kadhalukku Maranam Illai, Gaantham is making his come back to Kollywood with a straight tamil film GOD ( Glory Of Daemon). This film is set to launch in Jan 2023 after the release of his ongoing kannada movie Ramachari 2.0. The casting will include prominent artists from south india and Bollywood. Raghavendra Rajkumar- actor, producer and son of legendary actor Dr. Rajkumar will be playing an interesting role. Thej will be playing Antagonist role. Other characters and crew will be announced soon.