மீண்டும் தனுஷுடன்  இணைவேன் : இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்

0
229

மீண்டும் தனுஷுடன்  இணைவேன் : இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்

ஏற்கெனவே தனுஷுடன் இணைந்து பாடலை உருவாக்கிய இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன் மீண்டும் தனுஷுடன் இணைவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடிக்கும் படம் ‘வேட்டை நாய்’. இப்படத்தை  ஜெய்சங்கர் இயக்கி இருக்கிறார் . ராம்கி, சுபிக்ஷா நடித்துள்ளனர். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இரண்டு மெலடி பாடல்களும் ஒரு குத்துப் பாடலும் உள்ளன. தர லோக்கலாக உள்ள அதிரடி குத்துப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார். ஆலுமா டோலுமா போல் இந்த பாடல் பட்டைய கிளப்பும் என்று கூறுகிறார்  இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.
‘எழுமின்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் , அந்தப் படத்திற்காகத் தனுஷையும் அனிருத்தையும் பாடவைத்தார். அந்தப் பாடல்கள் மில்லியன் கணக்கில் ஹிட்சை அள்ளின. இவர் இரண்டாவது படமாக இசையமைக்கும் ‘வேட்டைநாய்’ படத்தில் இவரது இசையில் அனிருத் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
அதுபற்றிய அனுபவங்களை கூறும்போது, “நான் முதலில் ‘ எழுமின்’ படத்திற்கு இசையமைத்த போது அதில் தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று அவரை அணுகிக்  கேட்டேன் .நான் அறிமுக இசையமைப்பாளன் ,புதியவன் என்பதையெல்லாம் பார்க்காமல் அந்தப் படத்தில் பாடிக் கொடுத்தார் .அந்த பாடல் பெரிய ஹிட்டானது .அதே போல் அனிருத்தையும் கேட்டேன். அவரும் பாடிக் கொடுத்தார். இரண்டு பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றன. தனுஷும் அனிருத்தும் என் சகோதரர்கள் போன்றவர்கள். எனவே அவர்களுடன் உரிமையாகக் கேட்டேன் .அவர்கள் பெரிய ஆள் ,சின்ன ஆள் என்று பார்ப்பதில்லை. மனிதர்களை மட்டுமே பார்ப்பவர்கள். எனவேதான் ஒரு புதியவனான எனக்குப் பாடிக்கொடுத்தார்கள். அந்தப் படத்தில் யோகி பி.யும் எனக்காகப் பாடியிருந்தார்.
 அனிருத் ‘வேட்டைநாய் ‘படத்தில் பாடியிருக்கும் & அந்தப் பாடல் தர லோக்கலாக இருக்கும் . இந்தப் பாடலை ராஜகுரு சாமி எழுதியிருக்கிறார். இப்பாடல் அடித்து தூள் கிளப்பும். விரைவில் வெளிவர இருக்கிறது. பாடிக் கொடுத்தவுடன் அந்த பாடலை எப்படி வெற்றி பெற வைப்பது எப்படி என்பதிலும் அக்கறையோடு எனக்கு உதவுகிறார் அனிருத். அவருக்கு ‘ஆலுமா டோலுமா’ போல இந்தப்பாடல் பட்டைய கிளப்பும் ஒரு பாடலாக இருக்கும்.
முதல் படத்தில் தனுஷுடன் இணைந்த நான், மீண்டும்  அவரை வைத்துப் பாட வைப்பேன். மீண்டும் அவருடன் இணைவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
 விரைவில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் கைக்கெட்டும் தூரத்தில் தான் அந்த வாய்ப்பு இருக்கிறது என்று நம்புகிறேன்.எப்படி சொல்கிறேன் என்றால் தனுஷின் அன்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
‘வேட்டைநாய்’  படத்தில் மூன்று பாடல்கள். இரண்டும் மெலடியாக இருக்கும் .அனிருத் பாடிய பாடல் அதிரடியாக இருக்கும்” என்று கூறுகிற கணேஷ் சந்திரசேகரன் கலை, ஆரி கதாநாயகனாக நடிக்கும் இரண்டு படங்களில் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
வேட்டை நாய் – தயாரிப்பு சுரபி பிலிம்ஸ் , தாய் மூவிஸ்.
Music: Ganesh Chandrasekaran
Movie: Vettai Naai
Lyrics: Rajagurusamy
Director: Jaishankar
Cast: RK Suresh, Ramki, Subhiksha