மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

0
155

மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், வினய், யோகி பாபு, பிரியங்கா மோகன், கிங்ஸ்லி, அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டாக்டர்’. அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

வசூல் ரீதியில் டாக்டர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு திரைப்படத்தை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் ஓரிரு வாரங்களில் முடிவடைந்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமர், தற்போது விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படம் வெளியான பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் அவர் இயக்கும் அடுத்த படத்திற்கான வேலைகள் தொடங்கும் என திரைத்துறையினர் கூறுகின்றனர்.