மிகப்பெரும் ஹிட்டடித்த, நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa”!

0
298

மிகப்பெரும் ஹிட்டடித்த, நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் இரண்டாவது ஆல்பம் “Mazaa”!

நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் முதல் இந்தி ஆல்பமாக வெளியான “Booty shake” பெரும் ஹிட்டடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது ஆல்பமான “Mazaa”  பாடலும், பல சாதனைகளை படைத்து வருகிறது. வெளியான முன்றே தினங்களில் Youtube தளத்தில் 20 மில்லியன் பார்வைகளை குவித்து,


இந்திய அளவிலான பாடல்களில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அவரது முந்தைய இந்தி பாடலான “Booty shake”  பாடலும் 20 மில்லியன் பார்வைகளை குவித்தது குறிப்பிடதக்கது.
இந்திய இசை உலகில் பெரும் ஆளுமையாக கோலோச்சும் B.பிராக் “Mazaa”  பாடலை இசையமைத்து உருவாக்கி பாடியுள்ளார். இப்பாடலில் காதலின் பரிணாமங்களை, தனது அற்புத வரிகளால் தந்துள்ளார் ஜானி.  இப்பாடல் ரசிகர்களை உணர்வூர்வமாக பெருமளவில்  பாதித்துள்ளது சமூக வலைதளம் மற்றும்  Youtube தளங்களில் வரும் கருத்துக்களில் அப்பட்டமாக தெரிகிறது.  அர்விந்தர் கைய்ராவுடைய ( arvindr Khaira ) அற்புத கற்பனையில், தரமான இயக்கத்தில், பாடல் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டுள்ளது. பாடலில் நடிகை ஹன்ஷிகா மோத்வானியின் புதுவிதமான தோற்றம், அவரது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து, பாராட்டுக்களை குவித்துள்ளது.

ALSO READ:

Hansika Motwani’s second Hindi album ‘Mazaa’ is an overnight Chartbuster