மாஸ்டர் வசூல் சாதனை – ரசிகர்கள் கொண்டாட்டம்
ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் மாஸ்டர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் ஆடியோ வெளியீடு நடந்த சமயத்தில் தான் இந்தியாவில் கொரோனா தொற்று தலைதூக்க ஆரம்பித்தது. அதனால் கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய மாஸ்டர் இந்த வருட பொங்கலுக்கு வெளியானது.
கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியான முதல் பெரிய படம் என்பதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. திரையரங்கில் வெளியாகிய 16 நாட்களில் ஓடிடி-யில் வெளியிடப்பட்டாலும், தியேட்டர்களில் கூட்டம் குறையாமல் இருந்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற மாஸ்டர் வசூலிலும் முன்னணி இடத்தைப் பெற்றது.
இந்நிலையில், ‘பாகுபலி 2’ படத்தின் வசூலை ’மாஸ்டர்’ முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது பாகுபலி 2 படம் தமிழகத்தில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக இதுவரை இருந்தது. தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளதாம். இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், மாஸ்டர் வசூல் சாதனையை கொண்டாடி வருகிறார்கள்.
Powerful People comes from Powerful Places – #Baahubali2 Creates All Time Box Office Record in TN
History also tells us,
Powerful People Make Places Powerful – #Master has Recreated a New All Time Box Office Record in TN by beating Baahubali 2 ?#Master50InRamCinemas #Master pic.twitter.com/qKj2O3h79L
— Ram Muthuram Cinemas (@RamCinemas) February 28, 2021