‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

0
203

‘மாஸ்டர்’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜய் தற்போது ‘மாஸ்டர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் தீபாவளி விருந்தாக வெளிவர இருந்தது. கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால், ‘மாஸ்டர்’ படம் வெளியாகவில்லை. சமீபத்தில் தியேட்டர்கள் அனைத்தையும் திறப்பதற்கு அரசு அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து, ‘மாஸ்டர்’ படம் பொங்கல் விருந்தாக தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் அன்று ஓ.டி.டி.யில் திரையிடுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘நெட்பிளிக்ஸ்’ என்ற ஓ.டி.டி. இணையதள நிறுவனம் வெளியிடுகிறது என்றும் செய்திகள் வெளியானது.

இதை அறிந்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழுவினருக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் படக்குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில், ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த மிகப்பெரிய நாள் விரைவில் வரும் என நாங்களும் காத்திருக்கிறோம். ஓடிடி தளத்தில் இருந்து எங்களை அணுகியபோதும் திரையரங்கில் வெளியிடவே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் தியேட்டரில் வெளியாவதை படக்குழுவினர் உறுதி செய்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள்.