‘மாஸ்டர்’ திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை – விஜய் ரசிகர்கள் உற்சாகம்

0
128

‘மாஸ்டர்’ திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் புதிய சாதனை – விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ‘குட்டி ஸ்டோரி’ பாடல் யூ-டியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

‘மாநகரம்’, ‘கைதி’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜயுடன் கைகோர்த்து லோகேஷ் கனகராஜ் உருவாக்கிய திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா காலத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன், கொரோனாவால் முடங்கி கிடந்த தமிழ் சினிமாவிற்கு புது நம்பிக்கையை ‘மாஸ்டர்’ திரைப்படம் அளித்தது.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூ-டியூப்பில் 330 மில்லியன் பார்வையார்களை கடந்தநிலையில், இந்தப் படத்தில் விஜய் மற்றும் அனிருத் இணைந்து பாடிய குட்டி ஸ்டோரி பாடல், 100 மில்லியன் பார்வையாளர்களை தற்போது கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தின் அரபிக் குத்து பாடல் வெளியாகி, யூ-டியூப்பில் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.