மாஸ்டர் கதை திருப்தியாக இல்லை : நடிக்க மறுத்த சல்மான் கான் – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

0
165

மாஸ்டர் கதை திருப்தியாக இல்லை : நடிக்க மறுத்த சல்மான் கான் – விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான ‘மாஸ்டர்’ பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தை இந்தி ரீமேக் செய்யத் திட்டமிட்டனர்.

‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. ‘மாஸ்டர்’ படத்தின் கதையை இந்திக்கு ஏற்றவகையில் மாற்றினால் நடிப்பதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சல்மான் கானுக்கு ஏற்றவகையில் ‘மாஸ்டர்’ கதை மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், கதை திருப்தியாக இல்லை என்று கூறி சல்மான்கான் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால், மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கிடையில், லூசிபரின் தெலுங்கு ரீமேக்கில் சல்மான் கான் நடிக்க ஒப்புக்கொண்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. இந்த யூகங்கள் உண்மையாக மாறினால், சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் திரை இடத்தை பகிர்ந்து கொள்வதை நாம் பார்க்கலாம். இந்த படத்திற்கு காட்ஃபாதர் என்று பெயரிடப்பட்டது, இது சமீபத்தில் திரைக்கு வந்தது.