எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் ‘ஜீவன் நீயே’ பாடல் வெளியானது!!
இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. “ஜீவன் நீயே”, எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது.
ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது.
புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும்படி இந்தப்பாடல் அமைந்துள்ளது. பாடலாசிரியர் விவேகாவின் அருமையான வரிகள், காதலின் பல கோணங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது. ஹரிசரண் மற்றும் ஸ்ருத்திகா ஆகியோரின் அற்புதமான குரல்களில், இப்பாடல் மனதை மயக்குகிறது.
துருவா சர்ஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்டின்’ படம் கன்னட சினிமாவிலிருந்து வெளிவரும் மிகப்பெரிய அதிரடி முயற்சியாக, இந்திய சினிமாவில், ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கும் வகையிலான படைப்பாக, உருவாகியுள்ளது. இப்படம் உலகம் முழுக்க 13 மொழிகளில் டப் செய்யப்பட்டு, வெளியாக உள்ளது.
வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் கே மேத்தா புரொடக்ஷன் இணைந்து “மார்டின்” படத்தை பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளர். AP அர்ஜூன் இயக்கியுள்ள இப்படத்திற்கு, ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா கதை, திரைக்கதை எழுதியுள்ளார். சத்யா ஹெட்ஜ் ஒளிப்பதிவு செய்ய, KGF புகழ் ரவி பஸ்ரூரின் பரபரப்பான பின்னணி இசையுடன், மணி ஷர்மா இசையமைத்துள்ளார். இப்படம் 11 அக்டோபர் 2024 அன்று கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் பிற சர்வதேச மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.