‘மாமன்னன்’ திரைப்படம் வசூலில் சாதனை : மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
படம் வெளியான முதல் நாள் ரூ.6 கோடியையும், இரண்டாவது நாளான (ஜூன் 30) 5 கோடியையும், மூன்றாவது நாள் நேற்று ரூ.5 கோடி வசூலையும் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படம் 3 நாட்கள் முடிவில் மொத்தமாக ரூ.16 கோடியைத் தாண்டி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடித்த படங்களில் அதிக திரைகளில் வெளியான படம் ‘மாமன்னன்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் பரிசாக கொடுத்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை,… pic.twitter.com/ro4j7epjAI
— Udhay (@Udhaystalin) July 2, 2023
தங்களுடைய எண்ணங்களை கதையுடனும், களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துக்களை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது.
வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயன்ட் நிறுவனம் நிறுவனம் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ்-க்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். மாரி செல்வராஜ் தற்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.