‘மாநாடு’ வெற்றியை தமிழ்த் திரையின் வெற்றியாக பார்க்கிறேன் – சிம்பு

0
105

‘மாநாடு’ வெற்றியை தமிழ்த் திரையின் வெற்றியாக பார்க்கிறேன் – சிம்பு

மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தமிழ்த்திரையின் வெற்றியாக பார்ப்பதாக நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த மாநாடு திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகி வெற்றியடைந்தது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்ததால் கொரோனா கட்டுப்பாடுகள் நிறைவடைந்து திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு மாநாடு மீண்டும் திரையிடப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் மாநாடு திரைப்படம் 100 நாட்களை நிறைவு செய்கிறது.

இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் சிலம்பரசன் மாநாடு திரைப்படத்தை பார்த்தார். அப்போது பேசிய சிலம்பரசன் இந்த திரைப்படத்தின் வெற்றியை என்னுடைய திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கவில்லை, இன்றைய சூழலில் தமிழ் திரையுலகின் வெற்றியாக பார்ப்பதாக தெரிவித்தார். அத்துடன் மாநாடு தனக்கு மட்டுமில்லாமல் படக்குழுவினருக்கும் மனநிறைவை கொடுத்திருப்பதாகவும் கூறினார்.

மேலும் ரசிகர்களுடன் பேசிய சிலம்பரசன், “உங்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்தேன். விரைவில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உங்களை (ரசிகர்களை) அழைத்து நடத்த உள்ளேன்” எனத் தெரிவித்தார்.