மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…!!
சென்னை, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள ‘மாநாடு’ முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
படம் பார்த்த ரசிகர்கள் சிம்புவிக்கு இது தரமான கம்பேக் என்று கொண்டாடி வருகின்றனர். அதேவேளையில், மாநாடு படம் அனைத்து தரப்பினரிடமும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மாநாடு படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை உறுதி செய்துள்ள மாநாடு படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, தனது டுவிட்டரில், “மாநாடு படம் பார்த்துவிட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு படக்குழுவுக்கு தலைவர் (ரஜினிகாந்த்) வாழ்த்து தெரிவித்தார்” என்று பதிவிட்டுள்ளார்.
#Thalaivar @rajinikanth called and wished!!!
Me & STR
And that’s the tweet🙏🏽🙏🏽#maanaaduBlockbuster
— venkat prabhu (@vp_offl) November 26, 2021