மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love”  ஆல்பம் பாடல்!

0
329

மலையாள நாயகன் நீரஜ் மாதவின் அசரவைக்கும் “First love”  ஆல்பம் பாடல்!

ரசிகர்கள் மனம் மயக்கும், கேட்டவுடன் துள்ளல் நடனமாடச்செய்யும் “First love” பாடலை வெளியிட்டுள்ளார்
நீரஜ் மாதவ். இயக்குநர் கௌதம் மேனனின் “ஒன்றாக”  YouTube தளத்தில் நடிகர் ஆர்யா அவர்களால் இப்பாடல் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் பாடகர் மற்றும் நடிகராக திகழும் நீரஜ் மாதவ் தமிழில் தனது முதல் அறிமுகமாக  “First love” பாடல்
வெளியாகி வரவேற்பு பெற்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். மலையாளத்தில் ‘மூசா ரஹ்மான்’ எனும் கதாப்பாத்திரத்தில் இவர் நடித்த ஒரு வெப் சீரிஸ் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த இணைய தொடரில் இவரது நடிப்பு, பெரும் பாராட்டுக்களை குவித்தது. ”Panipaali” என இவர் பாடி வெளியிட்ட மலையாள சிங்கிள் ஆல்பம் பாடல், இதுவரையிலான சாதனைகள் பலவற்றை உடைத்து அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் எனும் சாதனை படைத்துள்ளது. தாய்க்குடம் பிரிட்ஜ் புகழ் சித்தார்த் மேனன் நீரஜ் மாதவ்வுடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். பிரபல ராப்பர், பாடலாசிரியர் அறிவு இப்பாடலை எழுதியுள்ளார்.

Link:

First Love Tamil Song YouTube link – https://www.youtube.com/watch?v=OVQRr6qwvSw

ALSO READ:

Neeraj Madhav just released a new single, “First Love,” – an upbeat song that can make you get on the dance floor