பிரபல மலையாள நடிகை கோழிக்கோடு சாரதா காலமானார்

0
149

பிரபல மலையாள நடிகை கோழிக்கோடு சாரதா காலமானார்

பிரபல மலையாள நடிகை கோழிக்கோடு சாரதா உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.

நாடகத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர் சாரதா. மலையாளத்தில் ஏற்கனவே ஒரு சாரதா இருந்ததால், கோழிக்கோடு சாரதா என்று இவர் அழைக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டு அங்காகுறி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், சல்லாபம், கண்ணெழுதி பொட்டும் தொட்டு, குட்டி ஸ்ராங், என்னு நிண்டே மொய்தீன் உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக ’ஜாரா’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். டி.வி.சீரியல்களிலும் நடித்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்றிரவு கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார். அவர் மறைவுக்கு திரையுலகினர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.