மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் சஞ்ஜீவன்
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார். இப்படத்தின் நடனத்தை சாண்டி மாஸ்டர் கையாள, ஸ்டண்டை ஃபயர் கார்த்தி மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது, நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.
இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.
இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மைய்யமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள். இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.
இப்படத்தில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பில் முக்கியமான காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது. அதற்காக செயற்கை மழையை தயார் செய்ய முயற்சி செய்தோம் சில காரணங்களால் அதனை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. இயக்குனர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதேப்போன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள் என்றார்.
சஞ்ஜீவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. இப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.