மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்தகரையில் உள்ள மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி தோல்வியடைந்தார்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டு மிகுந்த அவதிப்பட்டுள்ளார். இதனால் உடனடியாக ஆம்புலன்சில் அழைத்து வரப்பட்டு மருத்துவமனயைில் அனுமதிக்கப்பட்டார். மன்சூர் அலிகான் மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.
நடிகர் விவேக் உயிரிழந்த சமயத்தில் கொரோனா தடுப்பூசி குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. இதனால் தடுப்பூசி குறித்து அவதூறாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்தது என்பது குறிப்பிடதக்கது.