மண் வாசனை – An etar of millets (சிறுதானியங்களின் மணம்)

0
143

மண் வாசனை – An etar of millets (சிறுதானியங்களின் மணம்)

உணவக மேலாண்மை சமயற்கலை மற்றும் ஊட்டநெறி தொழில் நுட்பக் கல்லூரி, சென்னை, சுற்றுலா அமைச்சகம் – இந்திய அரசின் கீழ் இயங்கும் கல்லூரி தனது உணவுத் திருவிழா “மண் வாசனை”யை மார்ச் 03,2023 அன்று நடத்தவிருக்கிறது. இந்தக் கல்லூரி 1964 ஆம் ஆண்டில் கே. காமராஜர் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி அவர்களால் திறக்கப்பட்டது.

இந்தக் கல்லூரி தரவரிசை பட்டியலில் உலகளவில் 14 ஆம் இடத்தையும் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களை தக்க வைத்து கொண்டிருக்கிறது. 60 ஆண்டுகளாக இயங்கி தன் வைர விழாவை இந்த ஆண்டு கொண்டாடுகிறது. பிரபல புகழ் பெற்ற தலைமை சமயல் நிபுணர்களையும், தனியார் உணவக தொழில் அதிபர்களையும், நட்சத்திர உணவகங்களின் நிர்வாகிகளையும் உருவாக்கி தன் கொடியை நாட்டி வருகிறது.

இந்த உணவக மேலாண்மை கல்லூரி (சென்னை), பல ஆண்டு காலமாக வருடா வருடம் உணவுத் திருவிழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. சர்வதேச சிறு தானிய ஆண்டை (2023) தழுவி இந்த ஆண்டின் உணவு திருவிழா சிறு தானியங்களை கொண்டும், காஷ்மீரி சமயலை மையமாக கொண்டும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.

உணவுத் திருவிழா – மண் வாசனை

நாம் மறந்து போன, பாராட்ட தவறிய பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் இந்த “மண் வாசனை” உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.
நம் முன்னோர்களின் உணவு பழக்கத்தை நாமும் ருசிக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு. நாளைய உலகின் உணவை கையாலும் மாணவர்கள், நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க கடமை பட்டிருகின்றன. அதன் முதல் படியாக இந்த உணவு திருவிழாவை மேற்கொள்கிறோம். வைர விழா கொண்டாட படுவதால் 60 வகையான உணவுகள் (சைவம், அசைவம் மற்றும் இனிப்பு வகைகள்) கொண்டிருக்கின்றது இந்த மண் வாசனை. சிறு தானியங்களை கொண்டு பாரம்பரியமாகவும் மற்றும் நவீன முறைகளை கொண்டும் உணவு பட்டியல் அமைக்கப் பட்டிருக்கின்றது.

உணவு உற்பத்தி மட்டுமன்றி, விருந்தோம்பல், வரவேர்ப்பு துறை மற்றும் இல்ல பராமரிப்பு மேலாண்மை என்ற நான்கு பிரிவுகளும் ஒருங்கிணைதந்து இதை நிகழித்துகின்றன. மாணவர்களால் கையாள படுவதால் நிர்வாக திறன்களை மேம்படுத்த இது ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது. இது போன்ற நிகழ்ச்சிகளால் நம் கலாச்சாரத்தை பறைசாற்றும் விதத்தில் சுற்றுலா அமைச்சகமும் இந்த கல்லூரியும் ஒருங்கிணைந்து பல முயற்சியை மேற்கொள்கிறது.