மண்டேலா விமர்சனம்

0
371

மண்டேலா விமர்சனம்

ஒபன் விண்டோ புரொடக்ஷன் சார்பில் பாலாஜி மோகன் தயாரித்து ஒய் நாட் ஸ்டூடியோஸ், ரிலையன்ஸ் என்;டர்டெயின்மெண்ட், விஷ்பெர்ரி பிலிம்ஸ் வழங்கும் மண்டேலா திரைப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் மN;டான் அஷ்வின்.

இதில் யோகி பாபு, சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை- பரத் சங்கர், ஒளிப்பதிவு -வித்யூ அய்யன்னா, எடிட்டிங் -பிலோமின் ராஜ், ஆர்ட் டைரக்டர் ராமு தங்கராஜ், மக்கள் தொடர்பு- நிகில்.
சூரங்குடி கிராமத்தின் ஊராட்சி தலைவர் சங்கிலி முருகன். இந்த ஊர் வடக்கூர் – தெக்கூர் என இரண்டு சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. இதனால் எந்த வசதியும் செய்ய முடியாமல் இருக்க இவர்களை சமரசம் செய்ய சங்கிலி முருகன் இரண்டு சாதிகளிலிருந்து பெண்ணை எடுத்து மணந்து கொள்கிறார். இவரின் இரண்டு மனைவிகளுக்கும் தலா ஒரு ஆண் மகன் பிறக்க, அதன் பின்னும் ஒத்து போகாத மகன்களால் அந்த ஊர் இரண்டு பிரிவுகளாகவே இருக்கிறது. ஊராட்சி தலைவர் தேர்தல் மீண்டும் வர, சங்கிலி முருகன் உடல் நலம் பாதிக்கப்பட, இரண்டு மகன்களும் எதிரும் புதிருமாக போட்டியிடுகின்றனர். இவர்களின் ஜாதி  ஒட்டு சரிசமாக இழுபறியாக இருக்கிறது. அந்த சமயத்தில் அனாதையாக மரத்தடியில் இருக்கும் சவரத்தொழில் செய்யும் யோகிபாபுவிற்கு தபால் ஊழியராக இருக்கும் ஷீலா ராஜ்குமாரின் உதவியால் வாக்காளர் அட்டை கிடைக்கிறது. இவரின் ஒட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்க கூடியதாகவும் அமைவதால் இரு மகன்களிடம் போட்டா போட்டி நிலவுகிறது. யோகிபாபு அந்த ஒட்டை வைத்து தன்னை வலப்படுத்திக்கொண்டாரா? கிராமத்தின் மேம்பாட்டிற்கு பயன்படுத்திக்கொண்டாரா? இவருக்கு ஒட்டால் கிடைத்த மரியாதை என்ன? இறுதியில் இவரது ஒட்டால் யார் ஜெயித்தார்கள்? என்பதே அசத்தலாக கதைக்களம்.

யோகி பாபு சாதாரண தோற்றத்துடன் தன்னுடைய இயல்பான நடிப்பால் நகைச்சுவையோடு படம் முழுவதும் யதார்த்தமாக பங்களிப்பை கொடுத்து கை தட்டல் பெறுகிறார். இவரின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டு தேர்ந்தெடுத்த கதாபாத்திரம் நிச்சயம் விருதுகளை குவிக்கும்.

இவருடன் சங்கிலி முருகன், ஷீலா ராஜ்குமார், ஜி.எம்.சுந்தர், கண்ணா ரவி மற்றும் அந்த ஊர் மக்களின் தேர்வு படத்தின் உயிரோட்டமாக காட்சிகளுக்கு உத்தரவாதம்.
பரத் சங்கரின் இசையும், வித்யூ அய்யன்னாவின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு துணை போகிறார்கள்.

திரைக்கதை,எழுத்து, இயக்கம்-மடோன் அஷ்வின். கிராமத்தில் ஒரு ஊரில் நடக்கும் சின்ன தேர்தல், அதில் ஏற்படும் ரணகளம் கலாட்டா, வெற்றியை நிர்ணயிக்கும் ஒட்டு, அந்த ஒட்டால் கிடைக்கும் பலன்கள், அதை சரியாக பயன்படுத்தி கிராமத்திற்கு நன்மையை செய்தாரா என்பதை மண் வாசனையோடு கிராமத்து நக்கல் நையாண்டியுடன் நகைச்சுவையாகவும். சிந்திக்க வைக்கும்படியும் இயக்கி  வெற்றி வாகை சூடியிருக்கிறார் இயக்குனர் மடோன் அஷ்வின். திடீரென்று வெளிவரும் படங்கள் சில நன்மை ஆச்சர்யப்படுத்தும், அசத்திவிடும் அந்த வரிசையில் இடம் பெறும் இந்த படத்திற்கு பல விருதுகள் நிச்சயம் கிடைக்கும். இறுதியில் வெற்றியை கிராமத்திற்கு சமர்பிக்கும் காட்சியில் நச்சென்று மனதில் நின்று விடுவதோடு இந்த தேர்தல் நேரத்தில் சரியான படத்தை சரியாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் மடோன் அஷ்வின்.

மொத்தத்தில் மண்டேலா மண்ணில் பிறந்த அனைவரின் வாக்குரிமையை சொல்லும் படம். அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாட வேண்டிய படம்.