மகாபாரத ‘பீமன்’, தமிழ் சினிமாவில் ‘பீம் பாய்’ – காலமான அத்லெட் வீரர் பிரவீன் குமார்

0
83

மகாபாரத ‘பீமன்’, தமிழ் சினிமாவில் ‘பீம் பாய்’ – காலமான அத்லெட் வீரர் பிரவீன் குமார்

1988ஆம் ஆண்டு ‘மஹாபாரத்’ திரைப்படத்தில் பீமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரவீன் குமார் சோப்தி. இவர் நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். இவர் 50-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த பீம்பாய் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவிநாசி என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருந்த நாகேஷை பீம் பாய் ஒரே கையில் தூக்கி செல்லும் காட்சி இன்று வரை பிரபலமாக உள்ளது.

விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார்.

பிரவீன் குமார் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இரவு மாரடைப்பால் பிரவீன் குமார் காலமானார். 74 வயதாகும் பிரவீன் குமாருக்கு மனைவி, மகள், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.