போலீசில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்

0
233

போலீசில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்

கேரளாவின் திருச்சூரை பூர்வீகமாகக் கொண்ட ஐ.எம்.விஜயன் கால்பந்து மீது தீராக்காதல் கொண்டவர். இவரது திறமையை அடையாளம் கண்டார் அப்போதைய கேரள டிஜிபி எம்.கே.ஜோசப். காவல்துறை அணிக்கு ஆடிய ஐ.எம்.விஜயன் இந்திய கால்பந்து அணியில் 1989-ம் ஆண்டு நுழைந்து தனது திறமையால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அடித்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான இவர் இந்திய கால் பந்து அணியின் முதல் Player Of the year என்ற பட்டத்தைப் பெற்ற வீரரும் ஆவார். இந்திய அணிக்காக 70-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி 40 கோல்கள் அடித்த ஐ.எம்.விஜயன், 2003-ம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 300-க்கும் மேற்பட்ட கிளப் போட்டிகளிளும் விஜயன் விளையாடியுள்ளார்.

இதனிடையே திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வந்த ஐ.எம்.விஜயன், தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டரை கொலை செய்யும் நபராக நடித்து அசத்தியிருக்கும் ஐ.எம்.விஜயன் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கேரள காவல்துறையில் அசிஸ்டென்ட் காம்ண்டன்ட்டாக தான் பதவி உயர்வு பெற்றிருப்பதாக ஐ.எம்.விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.