போட்டோ எடுக்க முயன்ற ரசிகரை ஆவேசமாக திட்டி தாக்கிய பிரபல நடிகர் – வைரலாகும் வீடியோ

0
218

போட்டோ எடுக்க முயன்ற ரசிகரை ஆவேசமாக திட்டி தாக்கிய பிரபல நடிகர் – வைரலாகும் வீடியோ

பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா. இவர் மறைந்த நடிகர் என்.டி.ராமராவின் மகன். பாலகிருஷ்ணா நடித்த கவுதமி புத்ரா சதாகர்னி உள்ளிட்ட சில படங்கள் தமிழில் வந்துள்ளன. இந்துபூர் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டுக்கு பாலகிருஷ்ணா சென்று இருந்தார். அங்கு ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு நின்று அவரை வரவேற்றனர். கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியால் திடீரென்று பாலகிருஷ்ணா அருகில் சென்று போட்டோ எடுக்க முயன்றார். இது பாலகிருஷ்ணாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அந்த ரசிகரை ஆவேசமாக திட்டி ஓங்கி அடித்தார். ரசிகரை பாலகிருஷ்ணா தாக்குவதை இன்னொருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. இதுபோல் கூட்டத்தில் தன்னுடன் போட்டோ எடுக்க முயன்ற ரசிகர்களை பாலகிருஷ்ணா பல தடவை தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.