பேய் இருக்க பயமேன் விமர்சனம்

0
768

பேய் இருக்க பயமேன் விமர்சனம்

எஸ்.டி.தமிழரசன் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன், காயத்ரி ரமா, அர்ஜூன், நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா,  அபிராம் ஆகியோர் நடிக்க கதை, திரைக்கதை, வசனம் எழுதி பேய் இருக்க பயமேன் படத்தை சீ.கார்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-அபிமன்யு, இசை-ஜோஸ் பிராங்கிளின், படத்தொகுப்பு-ஜி.பி.கார்த்திக்ராஜா, நடனம்-ரேகா, பாடியவர் சைந்தவி, பிஆர்ஒ- ஆனந்த்.

கார்த்தீஸ்வரன், காயத்ரி மனம் ஒத்து போகாத புதுமண தம்பதிகள். தனி பங்களாவில் தங்கள் வாழ்க்கையை தொடங்க வருகிறார்கள். பேய் வசிக்கும் பங்களா என்று தெரியாமல் தனிதனியாக அறைகளில் தங்குகின்றனர்.ஜோடி பேய் இவர்களை பயமுறுத்துகிறது. பேய்களை விரட்ட முயற்சிகள் எடுத்தும் N;தால்வி அடைகிறது. அதன் பின் இணையதளம் வாயிலாக பேய்களை கண்டு பயப்படாமல் இருந்தால் விரட்டி விடலாம் என்ற காணோலியை பார்த்து  அதன்படி நடக்கிறார்கள். இறுதியாக பேய்களை இவர்கள் விரட்டினார்களா? பேய் இவர்களை வீட்டை விட்டு விரட்டியதா? என்பதே மீதிக்கதை.

கார்த்தீஸ்வரன் இயக்கியும் நடித்தும் இந்த படத்தில் தன் பங்களிப்பை திறம்பட செய்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக காயத்ரி ரமா சண்டைக்கோழியாக களமிறங்கி பின்னர் சமாதானப் புறாவாக மாறி கணவனை விரும்பும் பாத்திரத்தில் ஜோலிக்கிறார்.

அர்ஜூன், நியதி இருவரும் பேய்களாக வந்து தங்களால் முடிந்தவரை முதல் பாதியில் பயமுறுத்தியும் இரண்டாம் பாதியில் அடிபணிந்தும் தங்கள் நடிப்பை காமெடி கலந்து பயமுறுத்தலோடு சொல்லியிருக்கிறார்கள்.
ஒரே வீட்டில் நடப்பதால் காட்சிக் கோணங்கள் இயல்பாக இருக்க முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யு.

ஜோஸ் பிராங்கிளின் இசையில் சைந்தவி பாடிய பாடல் இனிமையாக உள்ளது.

ஜி.பி.கார்த்திக்ராஜா படத்தொகுப்பு இன்னும் கவனம் செலுத்தி கத்தரி போட்டிருக்கலாம்.

பேய் படங்களில் எப்போதும் இருக்கும் பயமுறுத்தல், காமெடி என்பதை தாண்டி இரண்டாம் பாதியில் பேய்களோடு உறவாடி, புரிந்து கொண்டு பேய்களின் ஆசையை நிறைவேற்ற எடுக்கும் முடிவு என்று வித்தியாசமாக யோசித்திருந்தாலும் முதல் பாதியில் இழுவையாக இருப்பதால் கொஞ்சம் காட்சிகளை எடிட் செய்து கிரிஸ்பாக கொடுத்திருந்தால் படத்தின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகியிருக்கும்.ஆரம்ப காட்சிகள் தெளிவு இல்லை, அதை வைத்திருக்க தேவையில்லை. என்றாலும் பேய் கதையை கொஞ்சம் மாற்றி யோசித்து முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் போராடிக்காமல் கொடுத்திருக்கும் இயக்குனர் கார்த்தீஸ்வரனின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

அனைவரும் பார்க்கலாம் ரசிக்கலாம் பேய் இருக்க பயமேன்.