பூம் பூம் காளை விமர்சனம்

0
399

பூம் பூம் காளை விமர்சனம்

ஒளிமார் சினிமாஸ் சார்பாக து.தனராஜ் கென்னடி தயாரிப்பில் பூம் பூம் காளை ஸ்ரீவெங்கடேஸ்வரா பிக்சர்ஸ் வெளியிட படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.

படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின், கதாநாயகியாக சாரா தேவா நடித்துள்ளனர். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, காதல் அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு:K.P.வேல்முருகன்,படத்தொகுப்பு: யுவராஜ், இசை: P.R.ஸ்ரீநாத், பாடல்கள்: ளு.ஞானகரவேல்.

புதுமண தம்பதிகளான கெவின்-சாராதேவா தேனிலவு செல்கிறார்கள்.. சாராவிற்கு கணவனுடன் அன்பாக பழகி, அதன்பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும் என்ற கண்டிஷன் போடுகிறார். இதனால் கெவின் மனைவியின் மனதை மாற்ற நினைத்து தோல்வியே அடைகிறார். இவர்களின் எதிர்கருத்தால் தேனிலவு இனிமையாக அமைந்ததா? சச்சரவானதா? இவர்களுக்கு நேர்ந்த இடையூறு என்ன? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.

படத்தின் நாயகனாக பிரபல நடிகை அனுராதாவின் மகன் கெவின் மனைவியின் பேச்சுக்கு மைண்ட் வாய்ஸில் கவுண்டர் கருத்து கொடுத்து நகைச்சுவையோடு இயல்பாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.

மனைவியாக சாரா தேவா தேர்ந்த நடிப்பால் பேச்சு திறமையால் கவர்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், அப்புக்குட்டி, காதல் அருண், சச்சு, கிரேன் மனோகர், அபிநயாஸ்ரீ மற்றும் பலர் படத்தின் பக்கமேளங்கள்.

ஒளிப்பதிவு K.P.வேல்முருகன்,படத்தொகுப்பு யுவராஜ், இசை P.R.ஸ்ரீநாத் ஆகியோர் படத்தை தூக்கி நிறுத்த முயற்சி செய்கிறார்கள்.

திருமணத்தில் காதல் பொய், காமம் நிஜம் ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால் இதில் உண்மையின் சதவீதம் தான் அதிகம் என்பது புரியும் என்று சொல்லியிருக்கிறார். திருமணம் என்பது காமம் மட்டுமல்ல பேச்சால் நல்லபுரிதலும், நெருக்கமும் உண்டானால் தான் தம்பதியினர் இணைபிரியாத இனிமையாக வாழ்க்கை அமைத்துக் கொள்ள முடியும் விவாகரத்தை தவிர்க்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர் R.D.குஷால் குமார்.

மொத்ததத்தில் பூம் பூம் காளை பாய்ச்சலில் தடுமாறும் நிதானம்.