புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்

0
557

புதிய முயற்சியாக முற்றிலும் மாறுபட்ட சினிமாவை வெளியிடும் நீலம் புரொடக்சன்ஸ்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் பரியேறும்பெருமாள், குண்டு ஆகிய படங்களை தயாரித்திருந்தது வெற்றியையும், பெரும் வரவேற்ப்பையும் பெற்றுத்தந்தது.

அடுத்தடுத்து தயாரிப்புப்பணிகளில் நிறுவனம் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது. இன்னிலையில் நடிகர் கலையரசன் , அஞ்சலிப்பாட்டில் நடித்த ‘குதிரைவால்’ என்கிற படத்தை வெளியிடுகிறது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.

வித்தியாசமான முயற்சிகளை எப்போதும் ஊக்கப்படுத்தும் வகையில் விரைவில் ‘குதிரைவால்’ படத்தை வெளியிட இருக்கிறார்கள்.

குதிரைவால் படம் ரெகுலரான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக வந்திருக்கிறது. அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். ராஜேஷ் எழுதியிருக்கிறார்.

உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும், மேஜிக்கல் ரியாலிச சினிமாவாக இந்தபடம் இருக்கும்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் விதமாகவும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கிறார்.

இது போன்ற படங்கள் தமிழில் மிகக்குறைவு .
கலையரசன் மற்றும் அஞ்சலிபாட்டில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது .
விரைவில் படம் வெளியாக இருக்கிறது.

எழுத்து – ராஜேஷ்

இசை- பிரதீப் & மார்டின் விசர்

எடிட்டிங் – MKP கிரிதரன்

ஒளிப்பதிவு- கார்த்திக் முத்துக்குமார்.

கலை – ராமு தங்கராஜ்

சவுண்ட் – ஆண்டனி ரூபன்

பாடல்கள்- உமாதேவி

இயக்கம்- மனோஜ் லியோனல் ஜாசன் & ஷ்யாம்.

தயாரிப்பு – யாழி பிலிம்ஸ்

வெளியிடு – நீலம் புரொடக்சன்ஸ்.

ALSO READ:

As a new initiative, Neelam Productions presents a film that would define a paradigm shift in Tamil Cinema