புதிய அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா

0
112

புதிய அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது யுவன் கூறும்போது, இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்த முதல் திரைப்படமான அரவிந்தன் படம் கடந்த 1997ம் ஆண்டு இதே நாள் வெளியானது. திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், யுவன்சங்கர்ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. என் அன்பையும், நன்றியையும் எனது ரசிகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் என்னால் இந்த 25 வருடத்தை கடந்திருக்க முடியாது.

என் ஆழ்மனதிலிருந்து உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து என்னுடன் பணியாற்றிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். நீங்கள் இல்லாவிட்டால், இசையின் மீதான என் காதலை வெளிப்படுத்தியிருக்க முடியாது.

16 வயது சிறுவனாக அரவிந்தன் படத்துக்கு இசையமைக்கத் தொடங்கி, இன்று வலிமை வரை வந்திருக்கிறேன். நான் இசையமைத்த பல புதிய படங்கள் வரும் காலங்களில் வெளியாக உள்ளன. இதுவரையான என் இசைப்பயணம் மகிழ்ச்சியாகவும், மேஜிக்காகவும் இருக்கிறது. என் தந்தைக்கு இந்தநேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் தகுதியான இசையை அமைப்பது மட்டுமே எனது குறிக்கோள். ஊடக நண்பர்களுக்கு எனது நன்றிகள்.

உங்களின் ‘பிஜிஎம் கிங்’ ‘லிட்டில் மேஸ்ட்ரோ’ உள்ளிட்ட பட்டங்கள் தான் இதுவரை நான் அடைந்திருக்கும் உயரத்திற்கு காரணமாக அமைந்தது. என் ரசிகர்களின் அன்புக்கு முன்னதாக விருதுகள் எனக்கு பெரிய விஷயமே அல்ல. ரசிர்களின் அன்புதான் என்னை முன்னோக்கி ஓட வைக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

”25 வருடம் எப்படி வேகமாக சென்றது எனக்கு தெரியவில்லை. நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்கள் வேலை செய்துள்ளோம். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. நான் பயணங்களின் போது அப்பா பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பேன். என் மனைவி ‘போதும் பாட்டை மாத்துங்க’ன்னு சொல்ற அளவுக்குப் கேட்பேன்”.

விஜய் சாருடன் இருக்கும் ஜெகதீஷ், “விஜய் சார் மகன் ‘யுவனிசம்’ என்ற டிசர்ட் போட்டுக்கொண்டு இருக்கும் போட்டோவை எனக்கு அனுப்பினார். பிறகு நான் விஜய் சாரை பார்க்கச் சென்றபோது, “நான் தான் உங்களுக்கு போட்டோவை ஜெகதீஷிடம் அனுப்பச் சொன்னேன். என் பையன் உங்களோட வெறித்தனமான ஃபேன்” என்றார் விஜய் சார்.

எனக்கு இந்தி தெரியாது. அவர்களைப் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த டிசர்ட்டை போடவில்லை. எனக்கு இந்தி தெரியாது. “எனக்கு இசையில்தான் ஆர்வம். நடிப்பில் ஆர்வம் இல்லை. அப்பாவிடம் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றதற்கு ‘ஓ அப்படியா’ என்றார். இந்தத் தருணத்தில் என் அம்மாவை மிஸ் பண்றேன். என் நினைவில் என்றும் இருப்பார். அம்மா இல்லாததை என் மனைவியும் மகளும் நிறைவு செய்கிறார்கள்.

இசையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நான் அடுத்ததாக இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறேன். படம் இயக்க கதை எழுதி வைத்துள்ளேன். என்னுடைய ஒய்.எஸ்.ஆர் தயாரிப்பு நிறுவனம் மூலம், புதிய படத்தை இயக்க இருக்கிறேன். அந்த படத்தின் பணிகள் இந்த வருடம் அல்லது அடுத்த வருடம் தொடங்கும். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாக்க இருக்கிறேன்’ என்றார்.