பீஸ்ட் பட ஷூட்டிங்குக்கு இன்றுடன் குட்-பை சொல்லும் பூஜா ஹெக்டே! வைரலாகும் வீடியோ

0
134

பீஸ்ட் பட ஷூட்டிங்குக்கு இன்றுடன் குட்-பை சொல்லும் பூஜா ஹெக்டே! வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தளபதி 65 படம் என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசும் நடிகை பூஜா ஹெக்டே, “பீஸ்ட் படத்தில் வேலை செய்தது நன்றாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றியது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது. நெல்சன் ஸ்டைலிலும், விஜய் சார் ஸ்டைலிலும், சிறந்த பொழுது போக்கு படமாக பீஸ்ட் இருக்கும். படப்பிடிப்பின் போது நாங்கள் விடுமுறையை கழிப்பது போன்று உணர்ந்தோம். சோகமான விஷயம் என்னவென்றால் பீஸ்ட் செட்டில் இன்று எனக்கு கடைசி நாள். என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டது. உங்களை திரையரங்கில் சந்திக்கிறேன்: எனத் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைத்திருக்கும் பீஸ்ட் திரைப்படம் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.