பீஸ்ட் படத்தின் இந்தி டிரைலர்.. கொண்டாடும் ரசிகர்கள்

0
75

பீஸ்ட் படத்தின் இந்தி டிரைலர்.. கொண்டாடும் ரசிகர்கள்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

இதற்கான போஸ்டர்களும் சமீபத்தில் வெளியானது. அந்த போஸ்டரில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 3 மொழிகளிலும் இந்த படத்தின் பெயர் பீஸ்ட் என்றே அந்தந்த மொழிகளில் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் படத்தின் இந்தி பெயர் மட்டும் மாற்றப்பட்டு இருந்ததைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பீஸ்ட் படத்தை இந்தியில் ‘ரா’ என்ற பெயரில் வெளியிட உள்ளனர். இந்தியாவின் ரா உளவு அமைப்பை குறிக்கும் வகையில் தான் இப்படி பெயர் சூட்டப்பட்டிருக்குமோ என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. பல சர்ச்சைகளுக்கு உள்ளான இந்தி பெயரை கடந்து பீஸ்ட் படத்தின் இந்தி டிரைலரை படக்குழு இன்று 6 மணிக்கு வெளியிட உள்ளது.

இந்நிலையில், ஹலமிதி ஹபிபோ தெலுங்கு மற்றும் இந்தியில் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.