பிறந்தநாளான இன்று வெளியான புனித் ராஜ்குமாரின் கடைசிப்படம்! நெகிழ்ச்சியில் கன்னட ரசிகர்கள்

0
102

பிறந்தநாளான இன்று வெளியான புனித் ராஜ்குமாரின் கடைசிப்படம்! நெகிழ்ச்சியில் கன்னட ரசிகர்கள்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அண்மையில் மாரடப்பு காரணமாக உயிரிழந்தார். 46வயதேயான அவரது மரணம் கன்னட திரையுலகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அவரது உடல் பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் உள்ள தந்தையும் நடிகருமான ராஜ்குமார், தாயார் பர்வதம்மாள் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ஜேம்ஸ் அவரது முதல் பிறந்தநாளான மார்ச் 17, 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். முன்னதாக படக்குழு அறிவித்தப்படி மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் படத்திலிருந்து முதல் பார்வை குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்படுள்ளது. ராணுவ உடையில் புனித் ராஜ்குமாரை பார்த்த ரசிகர்க்ள கண்ணீர் மல்க படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது ஜேம்ஸ் படம் வெளியாகியுள்ளது. புனித் ராஜ்குமாருக்கு மரியாதை செலுத்துவம் விதமாக ஒருவாரம் வேறெந்த கன்னட திரைப்படங்களும் வெளியிடப்படாது என தகவல் வெளியாகியுள்ளது.