பிரம்மாண்ட நாயகன் படத்தில் நடித்த நாயகன் மற்றும் இயக்குனருக்கு திருப்பதி தேவஸ்தானம் பாராட்டு

0
123

பிரம்மாண்ட நாயகன் படத்தில் நடித்த நாயகன் மற்றும் இயக்குனருக்கு திருப்பதி தேவஸ்தானம் பாராட்டு

ஸ்ரீசினிவாச பெருமாள் வேடத்தில் நடித்த ஆர்யன் ஷாம், இயக்குனர் ஞானம் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக , பிரம்மாண்ட நாயகன் திரைப்படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது திருப்பதியின் வரலாறு மற்றும் இறைவன் திருப்பதி வெங்கடாசலபதியின் வாழ்க்கை வரலாறு பற்றிய இரு மொழி திரைப்படம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவரான துஸ்மாந்த குமார்தாஸ், திரைப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்த பிறகு, திருப்பதி வெங்கடாசலபதி கடவுளாக நடித்த இளம் நடிகர் ஆரியன் ஷ்யமை தனிப்பட்ட முறையில் அழைத்து வாழ்த்தினார் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியம் சார்பாக ஒரு கடிதத்தை நடிகருக்கு அனுப்பினார். அதில் இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாம், மற்றும் இயக்குனர் திருமதி ஞானம் பாலசுப்ரமணியம் (பம்பாய் ஞானம் ) மற்றும் பிரமாண்ட நாயகன் திரைப்படத்தின் முழு குழுவினருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்கள்.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான துஸ்மந்த குமார்தாஸ். ஆந்திர மாநில ஆளுநர் பிஷ்வபூஷன் ஹரிச்சந்தனின் மருமகன் ஆவார்.

இளம் நடிகர் ஆர்யன் ஷ்யாமுக்கு திருப்பதி வெங்கடாசலபதி வேடத்தை ஏற்று நடிக்கும் உத்வேகம் முக்கியமாக எஸ்.பி.முத்துராமன் இயக்கிய “ஸ்ரீ ராகவேந்திரா” படத்தில் ரஜினிகாந்த் அவர்களைப் பார்த்த பிறகு வந்தது.

பிரமாண்ட நாயகன் திரைப்படத்தின் இயக்குநர் “கலைமாமணி” திருமதி ஞானம் பாலசுப்ரமணியம் (பாம்பே ஞானம்), ஒளிப்பதிவு எஸ்.ஆனந்த் பாபு, இசை திவாகர் சுப்ரமணியம், கிரியேட்டிவ் தலைவர் மோகன் பாபு.

பிரம்மாண்ட நாயகன் பக்தி படத்தில் ஸ்ரீசினிவாச பெருமாள் வேடத்தில் நடித்த ஆர்யன் ஷாம் , இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது.

நாயகனாக ஆரியன் ஷ்யாம் நடிக்கிறார். அவர் சீனிவாசன், வேதவன், திருப்பதி பாலாஜி மற்றும் மகாவிஷ்ணு ஆகியோராக நடிக்கிறார். அதிதி மகாலட்சுமியாகவும் , சந்தியா ஸ்ரீயாக பத்மாவதி தேவியாகவும் நடிக்கிறார்கள்.

படம் விரைவில் வெளியாக உள்ளது .