பிரபாஸின் ஆதிபுருஷ் படப்பிடிப்பு நிறைவு :அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு

0
108

பிரபாஸின் ஆதிபுருஷ் படப்பிடிப்பு நிறைவு :அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு

500கோடியில் பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து பிரம்மாண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாப்பாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாப்பாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், தற்போது படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றதையடுத்து,படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.