பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு காலமானார், சோகத்தில் திரையுலகம்..
திருவனந்தபுரம், பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு. இவர், தமிழில், ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
1978-ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான நெடுமுடி வேணு, அதற்கு முன் நாடகங்க ளிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார்.மூன்று தேசிய விருதுகள் மற்றும் ஆறு மாநில திரைப்பட விருதுகளை வென்று உள்ளார்.
73 வயதான நெடுமுடி வேணு, சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டார். இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கேரள மீடியாக்கள் செய்தி வெளியிட்டு வந்தன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். இதனால் மலையாள திரையுலகே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.