பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

0
256

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

லிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் நடிப்பில் தற்போது தலைவி படம் உருவாகி உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை கங்கனா, ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்தார். சில சமயங்களில் அதன்மூலம், அவர் சர்ச்சையில் சிக்குவதும் உண்டு, அந்தவகையில், தற்போது மேற்குவங்க தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள், அவருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டர் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி, நடிகை கங்கனாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.