பிரபல இயக்குநர் சேத்தன் குமார்,  தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம் நடிப்பில் ‘பர்மா’ படத்தை இயக்குகிறார்!

0
179

பிரபல இயக்குநர் சேத்தன் குமார்,  தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷ் ராம் நடிப்பில் ‘பர்மா’ படத்தை இயக்குகிறார்!

‘கட்டிமேலா’ மற்றும் ‘புட்டகௌரி மதுவே’ போன்ற ஹிட் டிவி நிகழ்ச்சிகளில் தனது அட்டகாசமான நடிப்பின் மூலம் சின்னத்திரையில் மக்களின் இதயங்களை வென்ற அபார திறமையாளர் நடிகர் ரக்‌ஷ் ராம்,  ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் திரில்லர்  ‘பர்மா’  படம் மூலம்  முதன்முறையாக வெள்ளித்திரையை அலங்கரிக்கவுள்ளார். “பர்மா” படம்  கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் பிரம்மாண்ட  பான் இந்திய வெளியீடாக இருக்கும்.

‘பஹதூர்’, ‘பர்ஜரி’, ‘பாரதே’ மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசிப் படமான ‘ஜேம்ஸ்’ போன்ற வணிகரீதியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர்  சேத்தன் குமார் “பர்மா”  திரைப்படத்தை இயக்குகிறார்.

பர்மா திரைப்படத்தின் துவக்க  விழா பசவங்குடி தொட்ட கணபதி கோவிலில் பிரம்மாண்டமான முறையில் நடந்தது, இது ஒரு அற்புதமான சினிமா பயணத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாக அமைந்தது. தொடக்க விழாவில் அஷ்வினி புனித் ராஜ்குமார் கிளாப் அடிக்க, ராகவேந்திரா ராஜ்குமார் கேமராவை இயக்கி, படத்தை துவக்கி வைத்தனர். ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா முதல் ஷாட்டை எடுக்க “பர்மா”  பிரமாண்டமாக துவங்கியது.

பர்மா பெருமைமிக்க ஆளுமைகளான ஆதித்யா மேனன் மற்றும் தீபக் ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர்.

பர்மா படத்தின் படப்பிடிப்பு பணிகள்  அக்டோபரில் துவங்கவுள்ளது, மேலும் இப்படத்தில்   பங்குபெறவுள்ள நட்சத்திர நடிகர்கள் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

தயாரிப்பு: ஸ்ரீ சாய் ஆஞ்சநேயா நிறுவனம் இயக்குநர்: சேத்தன் குமார்
இசை: வி.ஹரிகிருஷ்ணா சண்டைக்காட்சிகள்: டாக்டர் K. ரவிவர்மா

ஒளிப்பதிவு : சங்கேத் MYS
எடிட்டர்: மகேஷ் ரெட்டி
ஆடைகள்: நாகலக்ஷ்மன் பாபு, நம்ரதா கவுடா நடனம்: பஜரங்கி மோகன்
கலை இயக்குனர்: ரகில்
எஃபெக்ட்ஸ் : ராஜன்
மேலாளர்: லோகேஷ் கவுடா K.V., ஜெகதீஷ் ராவ்
நிர்வாகத் தயாரிப்பாளர்கள்: நவீன், ஹரிஷ் அரசு நடிப்பு இயக்குனர்: சுனயனா சுரேஷ் மக்கள் தொடர்பு : யுவராஜ்.
ஸ்டில்ஸ்: மிருணாள் S காஷ்யப்
போஸ்டர்: அஸ்வின் ரமேஷ்