பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

0
193

பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல்நல குறைவால் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி!

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தேசிய விருது பெற்ற ‘இயற்கை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்டவர் எஸ்.பி.ஜனநாதன். ‘ஈ’, ‘பேராண்மை’ படங்கள் மூலம் தன்னை தனித்துவமான இயக்குநராக நிறுவியர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ திரைப்படம் தயாராகிவந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.
இயக்குனர் எஸ் பி ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் எடிட்டிங் வேலைகள் இன்று மும்முரமாக நடந்துகொண்டிருந்த போது மதிய உணவுக்காக வீட்டுக்கு சென்றவர் மாலை 3 மணியாகியும் திரும்பிவராததால், அவரை தேடி அவரது உதவி இயக்குனர் எஸ் பி ஜனநாதன் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வீட்டின் மெயின் கேட் திறந்திருந்ததால் உள்ளே சென்று பார்த்த உதவி இயக்குனர் அங்கு இயக்குனர் எஸ் பி ஜனநாதன் மூச்சி பேச்சி இல்லாமல் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக, ஆம்புலன்ஸை வரவழைத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கொண்டு  சென்றுள்ளனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. மூளையில் பிரச்னை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.”

அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் விசாரித்தபோது, மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிசிக்கை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த விஷயம் கேள்விப்பட்ட விஜய் சேதுபதி, அமீர் மற்றும் திரையுலக பிரபலங்கள் அப்போலோ விரைந்தனர். இரவில் அவரை பார்க்க விஜய்சேதுபதிக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

திடீரென்று நேர்ந்துவிட்ட இந்த சம்பவம் குறித்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

எஸ்.பி. ஜனநாதன் நலம் பெற்று மீண்டு வர அனைவரும் வேண்டுவோம்.