பிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

0
312

பிரசாந்த் – சிம்ரன் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார்.

இதில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சிம்ரன். பொன்மகள் வந்தால் பட இயக்குனர் பேட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திற்கு அந்தகன் என்று தலைப்பு வைத்து இருக்கிறார்கள். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.