பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா பற்றி தெரிந்துக்கொள்வோம்..!

0
915

பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா பற்றி தெரிந்துக்கொள்வோம்..!

பிரபல பழம்பெரும் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம், திரைப்பட பின்னணிப்பாடகி ஏ. பி. கோமளா, பிறந்த தினம் இன்று. (28 ஆகஸ்ட் 1934)

ஏ. பி. கோமளா (A. P. Komala, பிறப்பு: 28 ஆகஸ்ட்1934).  தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

1940களில் இருந்து 1960களின் நடுப்பகுதி வரை இவர் பல திரைப்படங்களுக்கு பின்னணி பாடியுள்ளார். 1970கள் வரை மலையாளத்தில் தொடர்ந்து பாடி வந்தார். ஜி. ராமநாதன், கே. வி. மகாதேவன், எஸ். வி. வெங்கட்ராமன், ம. சு. விசுவநாதன், சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஆர். பாப்பா, வெ. தட்சிணாமூர்த்தி, ஜி. தேவராஜன் போன்ற பல பிரபலமான இசையமைப்பாளர்களின் படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார்.

பெண் மனம், தங்கப்பதுமை, தங்கமலை ரகசியம், மாமியார் மெச்சின மருமகள்‎, பொம்மை கல்யாணம், எங்கள் குடும்பம் பெரிசு, ஸ்ரீ வள்ளி, தாமரைக்குளம் ஆகிய திரைப்படங்களில் இவர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழில் இவரது பாடல்கள் இடம்பெற்ற படங்கள் சில………………

வேலைக்காரி (1949)
மந்திரி குமாரி (1950)
விஜயகுமாரி (1950)
குமாரி (1952)
காதல் (1952)
அந்தமான் கைதி (1952)
மதனமோகினி (1953)
ஜெனோவா (1953)
அழகி (1953)
மருமகள் (1953)
சண்டிராணி (1953)
பரோபகாரம் (1953)
சுகம் எங்கே (1954)
சந்திராஹரம் (1954)
தூக்கு தூக்கி (1954)
ரத்தபாசம் (1954)
வைர மாலை (1954)
ரத்தக்கண்ணீர் (1954)
விளையாட்டுப்பொம்மை (1954)
புதுயுகம் (1954)
ஜெயசிம்மன் (1955)
நீதிபதி (1955)
கல்யாணம் செய்துக்கோ (1955)
முல்லைவனம் (1955)
நல்லதங்காள் (1955)
கோமதியின் காதலன் (1955)
டாக்டர் சாவித்திரி (1955)
சதாரம் (1956)
தெனாலிராமன் (1956)
நான் பெற்ற செல்வம் (1956)
அமர தீபம் (1956)
மாதர்குல மாணிக்கம் (1956)
மறுமலர்ச்சி (1956)
ராஜராஜன் (1957)
மணமகன் தேவை (1957)
மணாளனே மங்கையின் பாக்கியம் (1957)
கற்புக்கரசி (1957)
பக்த மார்கண்டேயா (1957)
தங்கமலை ரகசியம் (1957)
சக்ரவர்த்தி திருமகள் (1957)
சம்பூர்ண ராமாயணம் (1957)
காத்தவராயன் (1958)
தேடிவந்த செல்வம் (1958)
சாரங்கதாரா (1958)
அன்னையின் ஆணை (1958)
பக்த ராவணா (1958)
குடும்ப கௌரவம் (1958)
உத்தமபுத்திரன் (1958)
எங்கள் குடும்பம் பெரிசு (1958)
மாலையிட்ட மங்கை (1958)
கன்னியின் சபதம் (1958)
அவன் அமரன் (1958)
மங்கள பாக்கியம் (1958)
திருமணம் (1958)
தங்கப்பதுமை (1959)
சிவகங்கைச்சீமை (1959)
வீரபாண்டிய கட்டப்பொம்மன் (1959)
மாலா ஒரு மங்கள விளக்கு (1959)
ராஜா மலையசிம்மன் (1959)
ராஜசேவை (1959)
நான் சொல்லும் ரகசியம் (1959)
மணிமேகலை (1959)
அமுதவள்ளி (1959)
கல்யாணிக்கு கல்யாணம் (1959)
அழகர்மலைக் கள்வன் (1959)
நளதமயந்தி (1959)
குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
விஜயபுரிவீரன் (1960)
களத்தூர் கண்ணம்மா (1960)
ரத்னபுரி இளவரசி (1961)
யார் மணமகன் (1961)
மல்லியம் மங்களம் (1961)
புனிதவதி (1962)
ராணி சம்யுக்தா (1962)
ரிஷியாசிங்கர் (1964)
தாயின்மேல் ஆணை (1966)
மன்னிப்பு (1969)
மகிழம்பூ (1969)

ALSO READ:

பின்னணிப்பாடகியும் – பழம்பெரும் திரைப்பட நடிகையுமான R.பாலசரஸ்வதி பற்றி தெரிந்துக்கொள்வோம்..!