பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்?

0
340

பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் பட்டியல்?

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

மாடலிங் துறையில் பிரபலமான சனம் ஷெட்டி 2016-ம் ஆண்டில் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தினை வென்றுள்ளார். ‘அம்புலி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கடந்த முறை பிக்பாஸ் தர்ஷனுக்கு ஆதரவாக இணையதள ஊடகங்களில் பேட்டியளித்து வந்தார். அதேபோல் தர்ஷன் – சனம் ஷெட்டியின் நிச்சயதார்த்த விவகாரமும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரம்யா பாண்டியன், தன் வீட்டின் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். கலக்கப்போவது யாரு சீசன் 9, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது பிக்பாஸிலும் கலந்து கொள்ள இருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். ஷிவானி நாராயணனை ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். தனது நடனங்கள் மற்றும் போட்டோஷூட்களால் ரசிகர்களை கிறங்கடித்து வரும் ஷிவானி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

‘3’ படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்தவர் கேப்ரில்லா. ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். விஜய் டிவி மூலம் கவனம் பெற்ற இவரும் இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது உறுதியாகியுள்ளது.

நடிகராக மட்டுமின்றி ஜல்லிக்கட்டு போராட்டம், சென்னை பெரு வெள்ளத்தின் போது உதவி செய்தது உள்ளிட்டவற்றின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆரி அர்ஜுனா. தற்போது இவரும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தவர் நடிகர் ரியோ ராஜ். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து ‘பிளான் பண்ணி பண்ணனும்’ படம் இவர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இவரும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரின் பட்டியலில் நடிகர் ஜித்தன் ரமேஷ் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் வீட்டிற்குள் வயதில் மூத்த ஒரு நபரை போட்டியாளராக களம் இறக்கி வருகிறது நிகழ்ச்சிக்குழு. அந்த வகையில் இம்முறை நடிகர் அனு மோகன் பிக்பாஸ் வீட்டில் நகைச்சுவையும், அதேவேளையில் வரும் இளசுகளுக்கு அறிவுரை வழங்குபவராகவும் இருக்கப் போகிறார் என்று கருதப்படுகிறது.

2012-ம் ஆண்டில் ரசிகர் வாக்குகளுடன் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்ற ஆஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். திருச்சியைச் சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை தன் பக்கம் இழுக்க இசை நிகழ்ச்சிகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கு உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த போட்டியாளர்கள் 2020 செப்டம்பர் 19 முதல் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.