‘பிக்பாஸ் அல்டிமேட்’: ஸ்டைலிஷ் லுக்கில் தொகுத்து வழங்கும் சிம்பு

0
96

‘பிக்பாஸ் அல்டிமேட்’: ஸ்டைலிஷ் லுக்கில் தொகுத்து வழங்கும் சிம்பு

பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை கமல்ஹாசனுக்குப் பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

’பிக்பாஸ்’ நிகழ்ச்சி சீசன் 5 வரை ஹிட் அடித்ததால் ’பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சி தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார், சினேகன், ஜூலி, தாமரை, அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளார்கள். நடிகர் கமல்ஹாசனே ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தற்போது ‘விக்ரம்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாலும் படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாவதாலும் அது சார்ந்த பணிகளில் ஈடுபடவிருப்பதால் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார் கமல்ஹாசன். அவருக்குப் பதில் யார் தொகுத்து வழங்கவிருக்கிறார்கள் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது.

இந்த நிலையில், ‘பிக்பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குகிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது விஜய் டிவி. இன்று வெளியிட்டுள்ள புரோமோ வீடியோவில் செம்ம ஸ்டைலிஷ் லுக்குடன், “எதிர்பார்கலல்ல… நானே எதிர்பார்க்கல.. பார்க்கலாமா” என்று பேசி எதிர்பார்ப்பைக் கிளப்புகிறார் சிம்பு.