பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ரேவ் பார்ட்டி’ படப்பிடிப்பு முடிவடைந்தது!

0
158

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ரேவ் பார்ட்டி’ படப்பிடிப்பு முடிவடைந்தது!

’ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது! – ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது.

போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராஜு போனகானி தயாரித்து இயக்கியுள்ள திரைப்படம் ‘ரேவ் பார்ட்டி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஐஸ்வர்யா கவுட கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் கிரிஷ் சித்திபாலி, ரித்திகா சக்ரவர்த்தி, ஐஸ்வர்யா கவுடா, சுச்சந்திர பிரசாத், தாரக் பொன்னப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மைசூர், உடுப்பி, பெங்களூர், மங்களூரு போன்ற பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்ட ‘ரேவ் பார்ட்டி’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெறும் 35 நாட்களில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள ‘பான் இந்தியா’ திரைப்படமான ‘ரேவ் பார்ட்டி’ வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து இயக்குநரும் தயாரிப்பாளருமான ராஜு போனகானி கூறுகையில், “ஒரே கட்டமாக சுமார் 35 நாட்களில் படத்தை முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில் படத்தை ஒரே கட்டமாக முடிக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றது.

பொதுவாக உடுப்பி, கோவா போன்ற இடங்களில் ரேவ் பார்ட்டிகள் கொண்டாடப்படுவது வழக்கம். எனவே ஒரு புதிய மற்றும் கலகலப்பான தோற்றத்தை கொடுக்க, இந்த அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். இது போன்ற பார்ட்டிகள் எப்படி தொடங்குகின்றன, ரேவ் பார்ட்டிகள் என்று அழைக்கப்படும் இதுபோன்ற நிகழ்வுகளில் யார் ஈடுபடுகிறார்கள்? மற்றும் ஒரு ரேவ் பார்ட்டி இளைஞர்களுக்கு என்ன சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இந்த படத்தில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. கதைக்களம் மற்றும் திரைக்கதை இளைஞர்களுக்கு பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகிறது.” என்றார்.