பவர்ஸ்டாருடன் வனிதா நடிக்கும் “பிக்கப்”

0
170

பவர்ஸ்டாருடன் வனிதா நடிக்கும் “பிக்கப்”

மிகுந்த பரபரப்பு ஏற்படுத்திய பிக்கப் திரைப்படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பவர் ஸ்டாருடன் வனிதா நடிக்கும் இத்திரைப்படத்தை எஸ். வினோத் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு அமெரிக்காவில் வாழும் சுகிர் பொன்னுசாமி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் இத்திரைப்படத்தை உருவாக்குவதற்காக சுகிர் பொண்ணு சாமியுடன் இணைந்திருப்பதாக தயாரிப்பாளர் வினோத் குமார் கூறியுள்ளார். இப்படம் பற்றி சுகிர் பொன்னுசாமி ” நான் அமெரிக்காவில் இருந்தாலும் தமிழ் திரைப்படங்களின் தகவல்களை சேகரிப்பது வழக்கம். சமீபத்தில் பவர் ஸ்டாரும் வனிதாவும் திருமணம் செய்ததாக ஒரு புகைப்படம் கண்டேன். பிறகு அவர்களுடைய படத்தின் பப்ளிசிட்டி என அறிந்தேன். பவர்ஸ்டாருக்கு வாழ்த்து கூறுவதற்காக அலைபேசியில் அழைத்தேன் .அவர் நீங்களும் எங்களோடு இப்படத்தை இணைந்து தயாரித்தால் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என்று சொல்லி இப்படத்தின் கதையை என்னிடம் கூறினார். இப்படத்தில் உள்ள நகைச்சுவை என்னை ரசிக்க வைத்தது . இந்த கொரோனா காலத்தில் அனைவரும் கடும் மன உளைச்சலில் இருப்பதால் இப்படத்தை காண்பது மூலமாக பலர் சிறிது நேரம் சிரிக்க முடியும் என்ற காரணத்தினால் எனது வாழ்நாள் சேமிப்பை இப்படத்திற்கு முதலீடாக தர விரும்பினேன். எத்தனை கோடிகள் ஆனாலும் எல்லோருக்கும் நகைச்சுவை விருந்து வைப்பது எனக்கும் பிக்கப் குழுவினருக்கும் நோக்கமாகும்” என்று கூறினார். இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் கூறினார்கள்.

சிவா கேமராவையும் , துர்கேஷ் படத்தொகுப்பையும் கவனிக்கிறார்கள். திரை உலகில் தயாரிப்பாளராக.நடிகராக, வினியோகஸ்தராக , அரசியல்வாதியாக வலம்வரும் பவர்ஸ்டார் சீனிவாசன் ” பிக்கப்” படத்தின் கதை , திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்து, நாயகனாக நடித்து தமது நூறாவது படமாக பணியாற்றி வருகிறார்.

விஜயமுரளி
கிளாமர் சத்யா
PRO