பழனியில் தொடங்கிய மம்முட்டி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் தமிழ்ப் படம்!

0
187

பழனியில் தொடங்கிய மம்முட்டி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் தமிழ்ப் படம்!

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் ஆமென், அங்கமாலி டைரிஸ், இ.ம.யோ, ஜல்லிக்கட்டு படங்கள் அவருக்கும் மலையாள சினிமாவுக்கும் உலக அளவில் புகழ் வாங்;கித் தந்தவை. ஜல்லிக்கட்டு திரைப்படம் இந்தியா சார்பில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டது. அவர் இப்போது சுருளி என்ற படத்தை இயக்கியுள்ளார். செம்பன் வினோத் இதில் பிரதான வேடத்தில் நடித்துள்ளார். விரைவில் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.

சுருளியை அடுத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தை மம்முட்டியை வைத்து இயக்குகிறார். இது தமிழ், மலையாளம் இரு மொழிகளில் தயாராகிறது. மம்முட்டி கம்பெனி என்ற நிறுவனம் சார்பில் மம்முட்டியே படத்தை தயாரிக்கிறார். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் திரைக்கதையை எஸ்.ஹரிஷ் எழுத, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் கர்ணன் உள்ளிட்ட முக்கியமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். மம்முட்டி நடித்த பேரன்பு படத்துக்கும் இவர் ஒளிப்பதிவு செய்திருந்தார். மம்முட்டி நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் புழு படத்துக்கும் இவரே ஒளிப்பதிவு.

நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடந்து வருகிறது. மம்முட்டி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஒரே ஷெட்யூல்டில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முதல் நேரடி தமிழ்ப் படம் என்பதால் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் மீது இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.